ஓட்டுப்பதிவு முடியும்வரை கருத்துக்கணிப்புகளுக்கு தடை - தேர்தல் கமிஷன் அறிவிப்பு

வியாழக்கிழமை, 16 மே 2019      தமிழகம்
First-Time-voters 2019 04 08

சென்னை : ஓட்டுப்பதிவு முடியும் வரை கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதித்து தேர்தல் கமிஷன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், கடந்த 18 ம்தேதி நடந்து முடிந்தது. வரும் 19 ம்தேதி சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டியில் 9 வாக்குச்சாவடிகள் முதல் பல்வேறு இடங்களுக்குமான 13 வாக்குசாவடிகளில் மறுவாக்குப்பதிவும் நடைபெறுகிறது,

இந்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் 19 ம்தேதி காலை 7மணிமுதல் மாலை 6-30 மணி வரை நடைபெறுகிறது, இத்தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது இதையொட்டி தேர்தல் முடியும்வரையில் 48 மணிநேர கருத்துக்கணிப்பு நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது..அனைத்து ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்களுக்கு இந்த தடை சுற்றறிக்கை மூலம் தேர்தல் கமிஷனால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து