பணி நியமனம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பாராட்டு

வியாழக்கிழமை, 16 மே 2019      சிவகங்கை
16 alagappa news

காரைக்குடி:- வளாக நேர்காணல் தேர்வில் பங்கு பெற்ற அனைத்து  மாணவ, மாணவிகளுமே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மேலாண்மை நிறுவனத்தில் எம்.பி.ஏ. இறுதியாண்டு மாணவர்களுக்கான வளாக நேர்காணல் தேர்வினை கடந்த 7.12.2018 அன்று IDBI-Federal  வங்கியும், 15.2.2019 –அன்றுDFC Life Insurance Company  6.3.2019-அன்று மதுரை, Leeways Pvt. Ltd. கம்பெனியும், 12.3.2019-அன்று ICICI வங்கியும், 30.3.2019-அன்று பெங்களுரு Erflog Pvt. Ltd  கம்பெனியும், 12.4.2019-அன்று Integrated Enterprise Ltd போன்ற நிறுவனங்கள் நடத்தின.  

மேற்குறிப்பிட்ட தேதிகளில் நடைபெற்ற வளாக நேர்காணல் தேர்வுகளில் அழகப்பா பல்கலைக்கழக எம்..பி.ஏ – ஜெனரல் பாடப்பிரிவைச் சேர்ந்த 59 இரண்டாமாண்டு மாணவ, மாணவிகள் பங்கு பெற்று பல்வேறு பணிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.  பங்கு பெற்ற அனைத்து  மாணவ, மாணவிகளுமே தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  ICICI வங்கி 24 உதவி மேலாளர் பணியிடத்திற்கும், ;> Integrated Enterprise  டுவன. நிறுவனம் 12 செயல் தொடர்பு மேலாளர் (பயிற்சியாளர்) பணியிடத்திற்கும், HDFC Life Insurance Company  – 19 நிர்வாக அதிகாரி பணியிடத்திற்கும்,IDBI-Federal  வங்கி 18 அதிகாரிகள் பணியிடத்திற்கும், Erflog Pvt. Ltd.,  கம்பெனி 3 மனிதவள நிர்வாக அலுவலர் பணியிடத்திற்கும், டுLeeways Pvt. Ltd.,  கம்பெனி 12 நிர்வாக அலுவலர் பணியிடத்திற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் ஒன்றிற்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 தெரிவு செய்யப்பட்ட 59 மாணவ, மாணவியர்கள் இன்று (16.5.2019) அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. நா. இராஜேந்திரன் அவர்களிடமிருந்து தங்களது பணி நியமன ஆணைகளை நேரில் பெற்றுக்கொண்டனர்.  பணி நியமனம் பெற்ற அனைத்து மாணவ, மாணவியர் மற்றும் அவர்களுக்கு துணைப் புரிந்த பேராசிரியர்கள், வளாக நேர்காணல் தேர்விற்கு ஏற்பாடு செய்த அழகப்பா மேலாண்மை நிறுவனத்தை சேர்ந்த முன்னாள் மாணவர்களையும் துணைவேந்தர் வெகுவாக பாராட்டினார்.  இந்நிகழ்வின் போது அழகப்பா மேலாண்மை நிறுவன இயக்குநர் பேரா. சு. ராஜமோகன், பல்கலைக்கழக பதிவாளர் பேரா. குருமல்லே~; பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து