கமலுக்கு அரசியல் நாகரீகம் இல்லை - அமைச்சர் ஜெயகுமார் தாக்கு

வியாழக்கிழமை, 16 மே 2019      விளையாட்டு
jayakumar 2019 02 02

சென்னை : நடிகர் கமலுக்கு திரைப்படத்திலும், அரசியலிலும் நாகரீகம் இல்லை என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார். அவர்களை விடுவிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. தமிழ் மக்களின் விருப்பத்துக்காகவே தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் விஷ விதைகளை விதைத்து கமல் குளிர் காய நினைக்கிறார்.

அமைதியாக இருக்கும் தமிழகத்தில் மதக்கலவரம் ஏற்படுத்த கமல் விரும்புகிறாரா?தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையில் பேசக்கூடாது. கமல் நடித்த படங்களிலும், அரசியலிலும் நாகரீகம் இல்லை. அ.ம.மு.க.வில் சேர்ந்தவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவார்கள் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து