உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி 22-ம் தேதி இங்கி. பயணம் - கேதர் ஜாதவ் பங்கேற்பது சந்தேகம்?

வியாழக்கிழமை, 16 மே 2019      விளையாட்டு
Khedhar Jadav 2019 05 16

புதுடெல்லி : ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வரும் 22ஆம் தேதி இங்கிலாந்து புறப்படுகின்றனர்.

30-ம் தேதி தொடக்கம்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் மே 30ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள லண்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்காக அனைத்து நாடுகளும் தங்கள் அணிகளை அறிவித்துவிட்டன. இந்திய அணியில் ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராட் கோலி, கேதர் ஜாதவ், விஜய் ஷங்கர், தோனி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், யஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமத் ஷமி, புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பயிற்சிப் போட்டிகள்...

இந்நிலையில் உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சிப் போட்டிகள் வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது. முதல் நாள் நடைபெறும் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான், இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இரண்டாம் நாளான மே 25-ம் தேதியன்று இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் களம் காணுகின்றன.

இந்தியா பயணம்

இந்த பயிற்சிப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வரும் 22-ம் தேதி இங்கிலாந்து பறக்கவுள்ளனர். ஆனால் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் கேதார் ஜாதவ், நடந்து முடிந்து ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை. ஆனால் அவர் விரைவாக நலம் பெற்று வருகிறார். இருப்பினும் 22-ம் தேதிக்குள் அவர் நலம் பெற வேண்டும் என்பது கட்டாயமாகும். இல்லாத பட்சத்தில் அவர் தொடரிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேறொரு வீரர் அணியில் சேர்க்கப்படுவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து