அடுத்த ஆண்டு மீண்டும் வருவோம், கோப்பையை வெல்வோம் - சி.எஸ்.கே. வீரர் ஷேன் வாட்சன்

வியாழக்கிழமை, 16 மே 2019      விளையாட்டு
Shane Watson 2019 05 16

மெல்போர்ன் : ஐபிஎல் தொடரின் 12-வது சீசன் கடந்த 2 மாதங்களாக கோலாகலமாக நடைபெற்று வந்தது. இந்த தொடரில் மும்பை, சென்னை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி மும்பை அணி கோப்பையை வென்றது. இந்த போட்டியில் சென்னை அணி வீரர் வாட்சன் அதிரடியாக விளையாடி 80 ரன்கள் சேர்த்தார்.

ரசிகர்கள்...

கேப்டன் தோனி உட்பட அனைத்து முக்கிய வீரர்களும் அவுட்டான நிலையில் தனிஒருவராக அணியின் வெற்றிக்காக வாட்சன் இறுதிவரை போராடினார். போட்டியின் போது காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து வடியும் ரத்தத்துடன் வாட்சன் விளையாடும் போட்டோ வெளியாகி வைரலானது. சிஎஸ்கே அணியின் வெற்றிக்காக ரத்தத்துடன் விளையாடிய ஷேன் வாட்சனை ரசிகர்கள் கொண்டாடினர். சென்னை அணி தோற்றாலும் ஷேன் வாட்சனின் அற்பணிப்பை பார்த்து ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகின்றனர்.

வீடியோ வெளியீடு...

இந்நிலையில் ஷேன் வாட்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் , ‘கடந்த சில நாட்களாக நீங்கள் எனக்கு கொடுத்த அன்பும் வாழ்த்துகளுக்கும் நன்றி. மும்பை அணியுடனான இறுதிப்போட்டியில் கோப்பையை நழுவ விட்டோம். இந்த போட்டி மறக்க முடியாதது. மீண்டும் அடுத்த வருடம் வந்து கோப்பையை வெல்வோம். அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து