உத்தரகாண்டை சேர்ந்த இளம் பெண் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டு சாதனை

வெள்ளிக்கிழமை, 17 மே 2019      இந்தியா
Young woman Everest 2019 05 17

ராஞ்சி, உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது இளம் மலையேற்ற வீராங்கனையான ஷீத்தல் ராஜ் எவரெஸ்ட் மலைச்சிகரத்தைத் தொட்டுள்ளார்.

பாராட்டி பரிசு...

மிக இளம் வயதில் எவரெஸ்ட்டை எட்டிய பெண்ணாக இவர் சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டில் கஞ்சன் ஜங்கா மலைப்பகுதியில் சிகரத்தைத் தொட்டு நிகழ்த்தப்பட்ட சாதனை நேற்று அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் பெற்றுள்ளது.இதனையடுத்து உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்தர் சிங், ஷீத்தலை பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

மறக்க முடியாதது...

சிறுவயது முதலே மலையின் உயரம் தம்மை கவர்வதாக கூறியுள்ள ஷீத்தல், டார்ஜிலிங்கில் இமய மலையேறும் பயிற்சியில் நான்கு ஆண்டுகளாக பயிற்சி பெற்றுள்ளார். அதிகாலை 3.30 மணிக்கு கடும் குளிரில் இமய மலைச் சிகரத்தை எட்டியதை நினைவுகூர்ந்த ஷீத்தல் இருட்டில் ஒன்றும் தெரியவில்லை என்பதால் விடியும் வரை காத்திருந்த பின்தான் தாம் சிகரத்தை எட்டியதை அறிந்ததாக கூறினார். ஒருபுறம் நேபாளம், மறுபுறம் இந்தியா முன்னால் சீன எல்லை என்று கண்ட காட்சி மறக்க முடியாதது என்றும் ஷீத்தல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து