ஊழியர்களுக்கு வித்தியாசமான ஆலோசனை வழங்கிய ஜாக் மா

வெள்ளிக்கிழமை, 17 மே 2019      உலகம்
Jack-Ma 2019 05 17

பெய்ஜிங், 669 சூத்திரப்படி, கலவியில் ஈடுபடுங்கள் என்று ஊழியர்களுக்கு அலிபாபா நிறுவனர் ஜாக் மா ஆலோசனை வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் மாதம், வாரத்திற்கு 6 நாட்கள், காலை 9 முதல் மாலை 9 மணிவரை என வேலை செய்ய வேண்டும் என்று தனது ஊழியர்களுக்கு ஜாக் மா தெரிவித்திருந்தது சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற அலிபாபா நிறுவனத்தின் ஆண்டு பொது கூட்டத்தில் 102 ஊழியர்களின் திருமணமும் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய ஜாக் மா 669 என்ற எண்ணை கூறி, வாரத்திற்கு 6 நாட்கள், 6 முறை என நீண்ட நேரம் கலவியில் ஈடுபடுங்கள் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து