வாட்ஸ் அப் மூலம் முத்தலாக் கூறிய கணவர் தலைமறைவு

வெள்ளிக்கிழமை, 17 மே 2019      இந்தியா
whatsapp 28-09-2018

மும்பை, வாட்ஸ் அப் மூலம் முத்தலாக் கூறிய கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முத்தலாக் கூறி விவாகரத்து செய்வது சட்ட விரோதம் என சுப்ரீம் கோர்ட்  உத்தரவிட்டது. இதனையடுத்து முத்தலாக் மூலம் விவாகரத்து கோருபவர்கள் குற்றவாளியாக கருத்தப்படுவர். இந்நிலையில் மகாராஷ்டிராவின் தானே பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்ணுக்கு அவரது கணவர் வாட்ஸ் அப் மூலம் முத்தலாக் அனுப்பி உள்ளார். அப்பெண்ணின் புகாரை அடுத்து கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சித்ரவதை

போலீசார் வெளியிட்ட தகவலின்படி, 25 வயதான அப்பெண் ஷேக் என்பவரை 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருக்கு 4வயதில் மகனும் உள்ளார். இந்நிலையில் சில வருடங்களாக பிறந்த வீட்டில் இருந்து பணம் வாங்கி வருமாறு ஷேக்கும் அவரது குடும்பத்தினரும் அப்பெண்ணை சித்ரவதை செய்துள்ளனர். கணவர் குடும்பத்தினரின் கொடுமை தாங்காத அந்த பெண் தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.
 
கணவர் தலைமறைவு

இந்நிலையில் கடந்த 12-ம் தேதி வாட்ஸ் அப் மூலம் ஷேக் வாக்குவாதம் செய்துள்ளார். சிறிது நேரத்தில் வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் முத்தலாக் கூறியுள்ளார். இதனையடுத்து அப்பெண் தனது கணவர் ஷேக் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை முஸ்லீம் பெண்கள் திருமண பாதுகாப்பு உரிமை சட்டம் உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் ஷேக் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து பேசிய போய்வடா காவல் நிலைய ஆய்வாளர் கல்யாண் கர்பே, 'பெண்ணின் புகாரை அடுத்து அவர் கணவர் மீதும் அவரது பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணின் புகாரை அடுத்து ஷேக் தலைமறைவாகியுள்ளார். விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து