பிரதமருக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை: கமல்ஹாசன்

வெள்ளிக்கிழமை, 17 மே 2019      தமிழகம்
Kamal Hassan 2018 11 16

சென்னை, கோட்சே விவகாரத்தில் பிரதமருக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை.  சரித்திரம் பதில் சொல்லும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின்போது மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று பேசினார். இந்தியா முழுவதும் இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி வருகிறது. இதுகுறித்து பாரத பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியபோது, ஒரு இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது பிரதமர் கூறிய கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், பிரதமருக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. சரித்திரம் பதில் சொல்லும், இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியதில் தவறு இல்லை. இது உருவான சர்ச்சை அல்ல, உருவாக்கப்பட்ட சர்ச்சை என்று பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து