அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு அமோக வெற்றி தாருங்கள் - வாக்காளர்களுக்கு இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அன்பு வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 17 மே 2019      தமிழகம்
edapadi-panneer 2018 10 11

சென்னை : அ.தி.மு.க. வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, அதன் மூலம் நயவஞ்சக நரி சூழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்த நல்லாட்சியின் மீது தமிழக மக்கள் கொண்டிருக்கும் பற்றினையும், பாசத்தினையும் உறுதிபட இந்நாட்டுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்று வாக்காளர்களுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அ.தி.மு..க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாக்காளர்களுக்கு எழுதியுள்ள மடல் வருமாறு:-

அத்திக்கடவு-அவிநாசி...

நல்லதை எந்நாளும் போற்றி அல்லதை அறவே அகற்றுகின்ற அரசியல் ஞானம் மிகுந்த அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களுக்கு பணிவார்ந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஜெயலலிதா வழியில், சிறப்பு மிக்க மக்கள் பணியில் இவ்வரசின் முக்கிய சில சாதனைகள் பின்வருமாறு:-

சுமார் ஒரு கோடியே 86 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி. ஏழை, எளிய மக்கள் பயன்பெற 100 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம்.கைத்தறி நெசவாளர்களுக்கு 250 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம். தமிழ் நாட்டை மின்மிகை மாநிலமாக உயர்த்தியது. ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தாலிக்கு தங்கத்துடன் கூடிய திருமண நிதியுதவி. உயர்த்தப்பட்ட மகப்பேறு நிதியுதவி. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் 50 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி திட்டம் ரூ. 1,652 கோடியில் துவக்கம். காவிரி பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு - காவிரி நீர் மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைத்தது.குடிமராமத்து திட்டத்தின் மூலம் நீர்நிலைகள் தூர்வாரியது.83 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக மேட்டூர் அணை தூர்வாரப்பட்டது. விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்கியது.

எய்ம்ஸ் மருத்துவமனை...

கல்வி, உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றுக்கு சிறந்த மாநிலங்களுக்கான விருது. அயல் நாட்டில் ஆவின் விற்பனை மூலம் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டது. விவசாயத் துறைக்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இந்திய தேசத்தின் விருதினை வென்று சாதனை புரிந்தது. உடலுறுப்பு தானத்தில் இந்தியாவுக்கே வழிகாட்டியாய் தமிழ்நாடு திகழ்கிறது. உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ. 3 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்து, சுமார் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு. சிறு, குறு விசைத்தறியாளர்கள் பெற்ற மூலதனக் கடன் தொகை ரூ. 65 கோடி தள்ளுபடி செய்ய பரிசீலனை. ரூ.1,264 கோடியில் 262.62 ஏக்கரில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை. மதுரை இராஜாஜி மருத்துவமனை ரூ. 150 கோடியில் மேம்பாடு.

புதிய வருவாய் வட்டம்...

திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்கம்.240 கிராம ஊராட்சிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க மேலூர் -காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம்.,மதுரை தோப்பூர் - பச்சம்பட்டியில் புதிய துணைக்கோள் நகரம்.ஓட்டப்பிடாரம் - தருவை குளத்தில் ரூ. 250 கோடியில் புயல் புகழிட காப்பகம்,ரூ. 225 கோடியில் பில்லூர் குடிநீர் மேம்பாட்டுத் திட்டம். சூலூர் அரசு மருத்துவமனை, தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்வு.,கரூர் மாவட்டம் - புகளூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கம்.ரூ. 490 கோடியில் புஞ்சை புகளூர்-பரமத்தி வேலூருக்கு இடையே புதிய கதவணை.,ரூ. 250 கோடியில் அரவக்குறிச்சி-பரமத்தி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை.,கோவை கண்ணம்பாளையத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் இராணுவ தளவாட உதிரி பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலை உருவாக்கம்.

பெருவாரியான வாக்குகள்...

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற அண்ணா காட்டிய அன்புப் பாதையில், எம்.ஜி.ஆர், ஜெயலலி்தா ஆகியோர் வழியில் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக செயல்படும் இந்த அரசு மெருகோடு, மிடுக்கோடு தொடர்ந்து நடைபெற, வருகின்ற மே 19 அன்று நடைபெறும் நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில், உங்களின் பொன்னான ஆதரவை `இரட்டை இலைசின்னத்தில் வழங்கி, அ.தி.மு.க. வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, அதன் மூலம் நயவஞ்சக நரி சூழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்த நல்லாட்சியின் மீது தமிழக மக்கள் கொண்டிருக்கும் பற்றினையும், பாசத்தினையும் உறுதிபட இந்நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென, வாக்காளப் பெருமக்களாகிய உங்களையெல்லாம் அன்போடு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் எழுதிய மடலில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து