உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கங்குலி உள்ளிட்ட 24 வர்ணனையாளர்கள் பெயரை அறிவித்தது ஐ.சி.சி.

வெள்ளிக்கிழமை, 17 மே 2019      விளையாட்டு
24 commentators announce icc 2019 05 17

புதுடெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுரவ் கங்குலி உட்பட 3 இந்திய வர்ணனையாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.

30-ம் தேதி தொடக்கம்...

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்திய அணியில், ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராத் கோலி, விஜய் ஷங்கர், தோனி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், முகமத் ஷமி, புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணி வரும் 22ஆம் தேதி இங்கிலாந்து செல்ல இருக்கிறது.

24 வர்ணனையாளர்கள்...

இங்கிலாந்து மைதானங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளதால், பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உலக கோப்பை தொடருக்கான 24 வர்ணனையாளர்களை ஐ.சி.சி அறிவித்துள்ளது.

மூன்று இந்தியர்கள்...

இந்தியா சார்பில், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் மற்றும் ஹர்ஷா போக்ளே ஆகியோர் வர்ணனை செய்ய இருக்கின்றனர்.  மேலும், மைக்கேல் கிளார்க், குமார் சங்ககாரா (இலங்கை), பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து), ஷான் பொல்லாக் (தென்னாப்பிரிக்கா), மைக்கேல் ஹோல்டிங் (வெஸ்ட் இண்டீஸ்), கிரீம் ஸ்மித் (தென்னாப்பிரிக்கா), வாசிம் அக்ரம், ரமீஸ் ராஜா (பாகிஸ்தான்), நாசர் ஹூசைன் (இங்கிலாந்து), சைமன் டோல் (நியூசிலாந்து), மைக்கேல் சிலேட்டர் (ஆஸ்திரேலியா), மார்க் நிகோலஸ் (இங்கிலாந்து) உட்பட 24 பேர் வர்ணனையாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து