2003 உலகக்கோப்பை தொடரில் 673 ரன்கள் அடித்த சச்சினின் 16 வருட சாதனையை யாராவது முறியடிப்பார்களா?

வெள்ளிக்கிழமை, 17 மே 2019      விளையாட்டு
sachin comment 2018 3 29

புதுடெல்லி : 2003-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் 673 ரன்கள் அடித்து சச்சின் டெண்டுல்கர் நிகழ்த்திய சாதனையை இன்று வரை யாரும் முறியடிக்கவில்லை. சச்சினின் சாதனையை விராட் கோலி, ஜானி பயர்ஸ்டோ, டேவிட் வார்னர், கிறிஸ் கெயில், ரோஹித் சர்மா ஆகியோர் முறியடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிகாவுடன்...

உலகக்கோப்பை தொடர் வருகிற 30-ம் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் போட்டி லண்டனில் நடைபெறுகிறது. ஜூன் மாதம் 6-ம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதுகிறது.

673 ரன்கள் விளாசல்...

இந்நிலையில் 16 வருடங்களுக்கு முன் சச்சின் டெண்டுல்கர் நிகழ்த்திய சாதனையை இந்த உலகக்கோப்பை தொடரில் யாராவது முறியடிப்பார்களா என்ற கேள்வி இப்போதே எழத் தொடங்கிவிட்டது. 2003 உலகக்கோப்பை தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 673 ரன்கள் அடித்தார் சச்சின் டெண்டுல்கர். இதுவே உலகக்கோப்பை தொடரில் தனி நபர் அடித்த அதிக ரன்கள் ஆகும். 2003-ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் நிகழ்த்திய இந்த சாதனையை இன்று வரை யாரும் முறியடிக்கவில்லை. 2003 உலகக்கோப்பை தொடரில் ஒரு சதம், 6 அரை சதங்களை அடித்துள்ளார் சச்சின்.

கோலிக்கு வாய்ப்பு...

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சில வீரர்கள் இந்த தொடரில் சச்சினின் சாதனையை முறியடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் இந்திய அணி கேப்டன் விராட் கோலி. அவரை தொடர்ந்து இங்கிலாந்தின் ஜானி பயர்ஸ்டோ, ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், வெஸ்ட் இன்டீஸ் அணியின் கிறிஸ் கெயில், இந்திய அணியின் ரோஹித் சர்மா ஆகியோர் உள்ளனர்.

அதிக ரன்கள் எடுத்த டாப் 4 வீரர்கள்

வீரர்கள் ரன்கள் வருடம்
சச்சின் டெண்டுல்கர்  673 2003
மேத்யூவ் ஹேடன் 659 2007
மஹேல ஜெயவர்தனே 548 2007
மார்டின் குப்தில் 547 2015

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து