நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 10 மீனவர்கள் பலி

சனிக்கிழமை, 18 மே 2019      உலகம்
nigeria attack 2019 05 18

அபுஜா : நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சில ஆண்டுகளாக அரசினை எதிர்த்து போகோ ஹராம் பயங்கரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பின் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதல்களில் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர். 2 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இந்த பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே அடிக்கடி தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்  நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள சிறிய நகரமான கொண்டுகா பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர், அல்லு டாம் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது திடீரென அங்கு வந்த போகோ ஹராம் பயங்கரவாதிகள், மீனவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 10 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சில மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்த ராணுவ வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்தனர். படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து