முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூரியன், சந்திரன், வீனஸ், உள்ளிட்ட ஏழு கிரகங்கள் தொடர்பாக ஆய்வு நடத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்

சனிக்கிழமை, 18 மே 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : அடுத்த 5 ஆண்டுகளில் சூரியன், சந்திரன், வீனஸ், உள்ளிட்ட ஏழு கிரகங்கள் தொடர்பான ஆய்வு நடத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குவதற்காக யுவிகா 2019 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திட்டத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இஸ்ரோவின், யுவிகா திட்டத்தின் மூலம், ஒரு மாநிலத்திற்கு 3 பேர் வீதம், 108 மாணவர்களை இஸ்ரோ தேர்வு செய்து அவர்களுக்கு இரண்டு வார காலம் பயிற்சி அளிக்கப்படுவதாக சிவன் தெரிவித்தார்.

வருகிற 22-ம் தேதி பி.எஸ்.எல்.வி சி-46 ராக்கெட் மூலம், ஆர்.எஸ்.ஆர் 2-பி என்கிற செயற்கை கோளை நிலை நிறுத்தப் போவதாகவும் அவர் கூறினார். அடுத்த 5 ஆண்டுகளுக்கான இஸ்ரோவின் விண்வெளித்திட்டங்களை விளக்கிய சிவன், சூரியனின் வெளிப்பரப்பை ஆராய ஆதித்யா என்ற திட்டத்தை 2021-ம் ஆண்டு செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார். நிலவை ஆய்வு செய்யும் மங்கள்யான் 2 திட்டம் 2022-ம் ஆண்டில் செயல்படுத்தப்படும் என்றும் 2023-ம் ஆண்டு வீனஸ் கிரகத்திற்கு ராக்கெட் செலுத்தப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் குறிப்பிட்டார்.

ஜூலை மாதம் ஏவப்படும் சந்திரயான்-2, செப்டம்பர் 6-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி, நீர் இருக்கிறதா என்பன உள்ளிட்ட ஆய்வுகளில் ஈடுபடும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். இஸ்ரோவின், யுவிகா திட்டத்தின் மூலம், ஒரு மாநிலத்திற்கு 3 பேர் வீதம், 108 மாணவர்களை இஸ்ரோ தேர்வு செய்து அவர்களுக்கு இரண்டு வார காலம் பயிற்சி அளிப்பதாகவும், அவர் தெரிவித்தார். வருகிற 22-ம் தேதி பி.எஸ்.எல்.வி சி-46 , ஆர்.எஸ்.ஆர் 2-பி என்கிற செயற்கை கோளை நிலை நிறுத்தபோவதாகவும், இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து