முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேசில் துப்பாக்கி சூடு 11 பேர் உயிரிழப்பு

திங்கட்கிழமை, 20 மே 2019      உலகம்
Image Unavailable

ரியோ டி ஜெனிரோ : பிரேசில் நாட்டில் மர்ம நபர்கள் மது பாருக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் உயிரிழந்தனர்.  

பிரேசில் நாட்டின் பாரா மாநிலம், பெலம் நகரில் உள்ள ஒரு மது பாரில் நேற்று முன்தினம் மாலை வாடிக்கையாளர்கள் பலர் உற்சாகமாக மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்தபடி ஒரு பைக் மற்றும் 3 கார்களில் வந்த நபர்கள், பாருக்குள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

சிறிது நேரம் துப்பாக்கியால் சுட்ட அந்த நபர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த கொடூர தாக்குதலில் 6 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். 
துப்பாக்கி சூட்டுக்கான காரணம் தெரியவில்லை. தாக்குதல் நடைபெற்ற மது பாரில் போதைப் பொருட்கள் விற்பனை தாராளமாக நடைபெறுகிறது. எனவே, போதைப்பொருள் விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து