குருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்

திங்கட்கிழமை, 20 மே 2019      ஆன்மிகம்
Guruvayur-Temple 2019 05 20

திருவனந்தபுரம் : குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் நேற்று ஒரு நாளில் மட்டும் 177 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதுபோல 697 குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சியும் நடந்தது.  

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலும் ஒன்று.குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி விசாக திருவிழாவில் திருமணங்கள் மற்றும் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழாவின் முக்கிய முகூர்த்த நாள் விழா   நடந்தது. இதையொட்டி குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.  ஒரு நாளில் மட்டும் 177 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. 

இதுபோல 697 குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. திருமணம் மற்றும் சோறு ஊட்டும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தவர்களால் கோவிலின் திருமண மண்டபம் நிறைந்து காணப்பட்டது.

குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் நடந்த இந்நிகழ்ச்சிகளால் கோவிலுக்கு   ஒரு நாளில் மட்டும் ரூ.44 லட்சம் வருவாய் கிடைத்தது.

கோவிலுக்கு வந்த பக்தர்கள் நடத்திய நெய் அபிஷேகம், பால் பாயாசம், துலாபாரம் நிகழ்ச்சிகள் மூலமும் கோவிலுக்கு கூடுதல் வருவாய் கிடைத்தது.குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி கோவில் அமைந்துள்ள பகுதியில்  போக்குவரத்து மாற்றி விடப்பட்டிருந்தது. 

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து