சத்தீஷ்கர் மாநில முன்னாள் முதல்வர் ராமேசுவரம் திருக்கோவிலில் சுவாமி தரிசனம்: அப்துல்கலாம் குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரிப்பு.

திங்கட்கிழமை, 20 மே 2019      ராமநாதபுரம்
20  former Chief Minister of Chhattisgarh

  ராமேசுவரம்,-     ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சத்தீஷ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ராமன் சிங் நேற்று வருகை தந்தார்.அவரை ராமேசுவரம் திருக்கோவில் சார்பாக திருக்கோவில்  அலுவலர்கள் பேஷ்கார் அண்ணாதுரை,நேர்முக உதவியாளர் கலமநாதன்  ஆகியோர்கள் மாழை அணிவித்து மரியாதை செலுத்தி வரவேற்றனர்.பின்னர் கோவில் யானை ராமலெட்சுமியிடம் ஆசிபெற்றார்.பின்னர் ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிக்கு சென்றார். அங்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக பூஜைகள் மற்றும் தீபாராதனை பூஜையில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.இதனை தொடர்ந்து திருக்கோவிலில் பிரிதீஷ்டம் பெற்ற மூன்றாம் பிரகாரத்தை பார்வையிட்டார்.தொடர்ந்து ராமேசுவரம் பகுதியிலுள்ள மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் வீட்டிற்கு சென்றார்.அங்கு அவரை அப்துல்கலாம் பேரன் ஜேக்சலீம் வரவேற்றார்.அப்துல்கலாம் அண்ணன் முகமது முத்து மீரான் மரைக்காயரிடம் உடல் நலம் விசாரித்தார்.அங்கு முதல்வருக்கு  அப்துல்கலாம் குடும்பத்தினர் சார்பில் நினைவு பரிசாக கலாம் எழுதிய புத்தகத்தை வழங்கினார்கள். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் ராமன் சிங் புகழ்பெற்ற தனுஸ்கோடி பகுதியை பார்வையிட சென்றார்.பின்னர் பேக்கரும்பு பகுதியில் அமைந்துள்ள அப்துல்கலாம் நினைவகத்திற்கு சென்று அவரது சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
 
 செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் முதல்வர் தெரிவித்தது
பழமை வாய்ந்த ராமேசுவரம் திருக்கோவில் அருமையாக உள்ளது.திருக்கோவிலில் அதிகாரிகள் அளித்த உபசரிப்பு  எனக்கு பெரும்  மகிழ்ச்சியை தந்தது.பா.ஜ.கட்சி 300க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமையும். மோடி 40 ஆண்டுகளாக ஆன்மிக பணியில் ஈடுபட்டு வருகிறார்.அதன் பேரில்     உலக அமைதிக்காவும்,இந்திய மக்களின் நலன் கருதியும் தியானத்திற்கு சென்றார்.அப்துல்கலாம் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்,அவர் இந்திய நாட்டில் ஜனாதிபதியாக இருந்தது  எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.அதுபோல அவர் வீட்டிற்கு சென்று குடும்பத்தினரை சந்தித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.கட்சியின் மாவட்ட தலைவர் முரளிதரன் உள்பட கட்சியினர் இருந்துனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து