முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக உல்ஹக் நியமனம்

செவ்வாய்க்கிழமை, 21 மே 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், இந்தியாவுக்கான தூதராக மொய்ன் உல் ஹக் என்பவரை பாகிஸ்தான் அரசு  நியமித்துள்ளது.

இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு 20-க்கும் மேற்பட்ட புதிய அதிகாரிகளை நியமித்து இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளார்.  இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ள மொய்ன் உல் ஹக், தற்போது பிரான்ஸ் நாட்டுக்கான பாகிஸ்தான் தூதராக பணியாற்றி வருகிறார். புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதாலும், இந்தியாவில் பொறுப்பேற்க இருக்கும் புதிய அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டிய காரணத்தினாலும் மொய்ன் உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி, 18 தூதர்கள் மற்றும் துணைத் தூதரக உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்து உள்ளார். இதில் 5 பெண்கள் மற்றும் ஓய்வு பெற்ற 2 தளபதிகளும் அடங்குவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து