இந்திய தேர்தல் முடிவுகள் முதல் முறையாக அமெரிக்க தியேட்டரில் நேரடி ஒளிபரப்பு

செவ்வாய்க்கிழமை, 21 மே 2019      இந்தியா
election commission 2019 03 03

புது டெல்லி : இந்திய தேர்தல் முடிவுகள் முதல்முறையாக அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் உள்ள தியேட்டரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11-ல் துவங்கி மே மாதம் 19-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் நாளை 23-ம் தேதி எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கிய சில மணி நேரங்களில் முன்னிலை நிலவரம் தெரிய வரும்.

இந்நிலையில், இந்திய தேர்தல் முடிவுகள் ,அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் உள்ள உட்பரி தியேட்டரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அந்நாட்டு நேரப்படி இரவு 9.30 மணி முதல் காலை 5 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படும். இதற்கான நுழைவு கட்டணம் 10 அமெரிக்க டாலர் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து