முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனியில் திருஞானசம்பந்தர்க்கு ஞானப்பால் ஊட்டும் விழா விமரிசையாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

செவ்வாய்க்கிழமை, 21 மே 2019      திண்டுக்கல்
Image Unavailable

 திண்டுக்கல் -பழனியில் திருஞானசம்பந்தர்க்கு  ஞானப்பால் ஊட்டும் விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
      திருநீற்றின் பெருமையை உலகறிய செய்தவர் நால்வரில் ஒருவர் திருஞானசம்பந்தர் பெருமான். சமண சமயத்தின் பற்று கொண்ட பாண்டிய மன்னன் வெற்பு நோயால் பதிக்கப்பட்டு எந்த வைத்தியத்தாலும் நோய் தீர்க்க முடியாமல் அவதிப்பட்டு வந்த போது அங்கு வந்த சம்பந்தர் பெருமான் திருநீற்றை வயிற்றில் பூசி நோயை தீர்த்தார்.  இதைத் தொடர்ந்து பாண்டிய மன்னனை சைவம் தழைக்க பாடும்படி சம்பந்தர் அறிவுறுத்தினார். இதனால் சைவசமயத்தின் மீது பற்று கொண்ட பாண்டிய மன்னன் ஏராளமான சிவ ஆலயங்களை அமைத்தார்..  இத்தகு பெருமைமிக்க திருஞானசம்பந்தருக்கு வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தின் போது சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது.
 திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை, பூஜைகள் நடத்தப்பட்டது. சம்பந்தர் பெருமானுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட பல்வேறு நறுமணமிக்க பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பின் தங்கத்தாலான பொற்கொண்டை அணிவிக்கப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஒதுவார்கள் தேவார இன்னிசை பாடல்கள் பாடினர். பின்னர்  உமாமகேஸ்வரர் தம்பதி சமேதராக திருஞானசம்பந்தர் உடன் கோயிலின் வடக்குப்பிரகாரம் எழுந்தருள அங்கு சுவாமிக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.  தங்கத்தாலான பொற்கிண்ணத்தில் இருந்த பால் பொற்கரண்டி மூலம் சுவாமிக்கு ஊட்டப்பட்டது.  பின் சுவாமி நான்கு ரத வீதியில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஞானப்பால் வழங்கப்பட்டது.  இந்த நிகழ்வை  ஏராளமானோர் கண்டுமகிழ்ந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து