வலதுகரமாக இருந்த ராம்வீர் கட்சியில் இருந்து நீக்கம்: மாயாவதி அதிரடி உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 21 மே 2019      இந்தியா
Mayawati 05-11- 2018

கொல்கத்தா, தனது வலது கையாக செயல்பட்டு வந்த ராம்வீர் உபாத்யாயை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சித் தலைவர் மாயாவதி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். முன்னாள் அமைச்சராக இருந்த ராம்வீர், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலங்களவைத் தலைவராகவும் இருந்து வந்தார். அதிலிருந்தும் நீக்குவதாக மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அலிகார், பாதேபூர், சிக்ரி மற்றும் ஹத்ராஸ் உள்ளிட்ட தொகுதிகளில் பா.ஜ.க. உறுப்பினர்களை ஆதரித்து ராம்வீர் செயல்பட்டதாக, பகுஜன் சமாஜ் பொதுச் செயலாளர் மேவா லால் கௌதம் அக்கட்சித் தலைவர் மாயாவதிக்கு கடிதம் மூலம் புகார் அனுப்பினார். இதையடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சதாபாத் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக மட்டும் ராம்வீர் தொடர்வார். இச்சம்பவம் உத்தரப்பிரதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து