ராமநாதபுரம் நகரில் பட்டபகலில் வாலிபர் குத்தி கொலை

புதன்கிழமை, 22 மே 2019      ராமநாதபுரம்
22 ramnadu crime

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் நகரில் பட்டபகலில் வாலிபர் மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
   ராமநாதபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் முனியசாமி என்பவரின் மகன் நாகநாதன்(வயது40) பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவியும் 2 பெண்குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை ராமநாதபுரம் குட்செட் தெரு பகுதியில் நின்று கொண்டிருந்த நாகநாதனை ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக கத்தியால் குத்திவிட்டுதப்பி ஓடிவிட்டனர்.  ரத்த வெள்ளத்தில் கிடந்த நாகநாதன் உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியில் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து