முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மறுப்பு

புதன்கிழமை, 22 மே 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : தோகாவில் தங்கம் வென்ற தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, தான் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார்.

800 மீ., ஓட்டத்தில்...

இந்திய தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து (30). தமிழகத்தை சேர்ந்த இவர் சமீபத்தில் தோகாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 800 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றார். இந்தப் போட்டியின்போது இவரிடம் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், ஸ்டெராய்டு என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக தெரிகிறது. இவர் தற்காலிகமாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பதக்கம் பறிபோகலாம்...

கோமதியின் 'பி' மாதிரியிலும் ஊக்கமருந்து கலந்திருப்பது தெரியவந்தால், இவர் நான்கு ஆண்டுகள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம். ஆசிய சாம்பியன்ஷிப்பில் வென்ற பதக்கமும் பறிபோகலாம். 

முற்றிலும் வதந்தி...

ஆனால் இச்செய்தியை கோமதி தரப்பினர் மறுத்துள்ளனர். இதுதொடர்பாக, கோமதி மாரிமுத்துவின் சகோதரர் சுப்ரமணி கூறுகையில், கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி. இந்திய தடகள கூட்டமைப்பிடமிருந்து எங்களுக்கு எந்த வித தகவல்களும் வரவில்லை என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து