ஓய்.எஸ்.ஆர். காங். ஆட்சியை பிடித்தது: ஆந்திர புதிய முதல்வராக 30-ம் தேதி பதவியேற்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி

வியாழக்கிழமை, 23 மே 2019      இந்தியா
Jaganmohan-Reddy 2019 05 20

ஐதராபாத், பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநிலத்துக்கான சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. இதில் எதிர்கட்சியாக இருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தேர்தலைச் சந்தித்தன. இதில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 150 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. இந்நிலையில், ஆந்திர முதல்வராக வரும் 30-ம் தேதி ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கிறார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் உம்மாரெட்டி வெங்கடேஸ்வரலு தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து