முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி பாராளுமன்ற தொகுதியில் ரவீந்திரநாத் குமார் வெற்றி முகம்

வியாழக்கிழமை, 23 மே 2019      தமிழகம்
Image Unavailable

தேனி : தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்குமார் வெற்றி முகத்தில் உள்ளார்.  இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

30 வேட்பாளர்கள்...

தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.ம.மு.க. சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ராதா கிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் அமீது உள்ளிட்ட 30 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

முன்னிலையில்...

இநத தொகுதியில் நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் முன்னணியில் இருந்து வந்தார். இந்த தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 54 ஆயிரத்து 51 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 11 லட்சத்து 55 ஆயிரத்து 565 வாக்காளர்கள் வாக்களித்தனர். பதிவான வாக்குகள் கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லூரியில் எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்து 10-வது சுற்று வரை அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் முன்னிலையில் இருந்து வந்தார். அதாவது தொடர்ந்து அவர் வெற்றி முகத்தில் உள்ளார்.

40 ஆயிரம் வாக்குகள்...

அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை விட 10-வது சுற்றின் போது 40 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார். அதாவது வெற்றி பாதையில் அவர் பயணித்து கொண்டிருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.ம.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் பின்னடைவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரவீந்திரநாத் குமார் வெற்றி முகத்தில் இருப்பதால் அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து