மாபெரும் வெற்றி: நாடு முழுவதும் பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாகம்

வியாழக்கிழமை, 23 மே 2019      தமிழகம்
BJP 2018 10 20

புது டெல்லி : நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளியானதில் பா.ஜ.க. மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இதனை நாடு முழுவதும் அக்கட்சி தொண்டர்கள் கோலாகலமாக உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். 

பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. துவக்கம் முதலே பா.ஜ.க. கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இருந்தது. இதனை உறுதி செய்யும் வகையில், தற்போது பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனை நாடு முழுவதும் பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து