படுதோல்வி எதிரொலி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு ராஜினாமா

வியாழக்கிழமை, 23 மே 2019      இந்தியா
Chandrababu Naidu 2019 03 28

ஐதராபாத் : ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதை அடுத்து, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

7 கட்டங்களாக...

மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி கடந்த 19- ம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடந்துள்ளது.

ராஜினாமா..

நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில், ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 175 இடங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 149 இடங்களில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வெறும் 25 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஒரு தொகுதியில் முன்னிலைப் பெற்றிருந்தது. படுதோல்வியை சந்தித்த சந்திரபாபு நாயுடு, தனது முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து