அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களிடம் மோடி ஆசி

வெள்ளிக்கிழமை, 24 மே 2019      இந்தியா
Modi blesses senior leaders-2019 05 24

புது டெல்லி, இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறை பிரதமராக பதவியேற்கப் போகும் நரேந்திர மோடி நேற்று அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்களிடம் வாழ்த்து பெற்றார்.

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டிருந்த கருத்துக் கணிப்புகளின்படி அபாரமான மெஜாரிட்டியுடன் மத்தியில் பா.ஜ.க. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது. இந்நிலையில், இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடி நேற்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் இல்லங்களுக்கு சென்று ஆசி பெற்றார். அவருடன் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷாவும் சென்றிருந்தார்.

இந்த சந்திப்பு தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி வெளியிட்டுள்ள பதிவில்,
இவர்களைப் போன்ற மிக உயர்ந்த தலைவர்கள் கட்டமைக்கவும் புதிய சித்தாந்தங்களின் மூலம் மக்களை ஈர்க்கவும் முன்னர் ஆற்றிய அரும்பணிகளால் தான் பா.ஜ.க.வின் இந்த வெற்றி சாத்தியமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து