முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பின்னடைவு: பொறுப்பு என்னுடையது: சீதாராம் எச்சூரி ஒப்புதல்

வெள்ளிக்கிழமை, 24 மே 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, நாடாளுமன்ற தேர்தலில் 1952-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மிகப்பெரும் தோல்வியை சந்தித்து உள்ளது. தேர்தலில் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு பொதுச்செயலாளர் என்ற முறையில் முதல் பொறுப்பு என்னுடையதுதான் என்று சீதாராம் எச்சூரி தெரிவித்துள்ளார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் தமிழகத்தில் 2 பேர் வெற்றி பெற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் இந்த தோல்விக்கு பொறுப்பேற்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரி அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மிகப்பெரும் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் இதற்கு முதல் பொறுப்பு என்னுடையது. எனவே அதற்கு நானே பொறுப்பாவேன் என்று கூறினார். மேலும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக மக்கள் ஒரு உறுதியான முடிவை வழங்கியிருப்பதாக கூறிய அவர், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமிது என்றும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து