காந்தியின் சித்தாந்தம் தோற்று விட்டது: காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங் வேதனை

வெள்ளிக்கிழமை, 24 மே 2019      தமிழகம்
Digvijay Singh 2018 9 12

புது டெல்லி, காந்தியின் சித்தாந்தம் தோற்று, அவரை கொன்றவர்கள் சித்தாந்தம் வென்றது வேதனை அளிக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
 
மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் போபால் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் சாத்வி பிரக்யா சிங் தாக்குரும், காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கும் போட்டியிட்டனர்.  இதில் சாத்வி பிரக்யா சிங் 8,66,482 வாக்குகளும், திக்விஜய் சிங் 5,01,660 வாக்குகளும் பெற்றனர். சாத்வி பிரக்யா சிங் 3,64,822 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறுகையில்,

நாட்டின் தற்போதைய நிலையில் காந்தியின் சித்தாந்தம் தோற்று, அவரை கொன்றவர்கள் சித்தாந்தம் வெல்வதா? இது எனக்கு வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து