முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி: முதல்வரை சந்தித்து ரவிந்திரநாத்குமார் ஆசி

சனிக்கிழமை, 25 மே 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தேனி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ரவிந்திரநாத்குமார், சென்னையில் முதல்வரும், அ.தி.மு.க. இணைஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி. பழனிசாமியை சந்தித்து ஆசி பெற்றார்.

முதல்வரிடம்...

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவிந்திரநாத்குமார் போட்டியிட்டு 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் நேற்று சென்னை கீரின்வேஸ்சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

உடன் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ஜெயலலிதா பேரவை மாநில செயலாளரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், அண்ணாதொழிற்சங்க கன்வீனர் எஸ்.டி.ஜக்கையன், எம்எல்ஏ தேனி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.எம்.சையது கான் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் மாணிக்கம் எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர்.

சூலூர் எம்.எல்.ஏ....

இதைத்தொடரந்து சூலூர் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில்வெற்றி பெற்ற வி.பி. கந்தசாமி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் தோப்பு க. அசோகன் தோப்பு அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர். இதற்கிடையே துணை முதல்வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் ரவிந்திரநாத்குமார் சந்தித்து ஆசி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து