முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்க அதிபராக ராமபோசா பதவியேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2019      உலகம்
Image Unavailable

பிரிட்டோரியா : தென் ஆப்பிரிக்காவின் அதிபராக சிரில் ராமபோசா நேற்று பதவியேற்றுக் கொண்டார். விழாவில் சர்வதேச தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தென்னாப்பிரிக்க நாட்டி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிபர் ஜேக்கப் ஜூமா கடந்த ஆண்டு பதவி விலகியதைத் தொடர்ந்து, சிரில் ராமபோசா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதன் பின் அதிபருக்கான தேர்வில் சிரில் ராமபோசாவின் பெயரே முன்மொழியப்பட்டது. அவர் போட்டியின்றி மீண்டும் தென்னாப்பிரிக்க குடியரசின் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதனை அந்நாட்டு பாராளுமன்றத்தில் தலைமை நீதிபதி மொகோயெங் கடந்த வாரம் கூறினார்.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவின் நிர்வாக தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள லாப்டஸ் வெர்ஸ்பெல்டு ஸ்டேடியத்தில் அதிகாரிகள் மற்றும் குடிமக்கள் முன்னிலையில் முறைப்படி நேற்று அதிபராக ராமபோசா பதவியேற்று கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநில தலைவர்கள் மற்றும் மாநில முன்னாள் தலைவர்கள், சர்வதேச தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய ராமபோசா, ஊழலை ஒழிக்கவும், தடுமாறும் பொருளாதாரத்திற்கு புத்துயிர் கொடுக்கவும் பாடுபடுவதாக உறுதி அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து