அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்திற்கு புதிய துணைவேந்தராக வைதேகி நியமனம் - கவர்னர் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 28 மே 2019      தமிழகம்
vaideki new chancellor 2019 05 28

சென்னை : கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்திற்கு புதிய துணைவேந்தராக வைதேகி விஜயகுமாரை நியமித்து பல்கலைக் கழகங்களின் வேந்தரும் கவர்னருமான பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். அவர் பொறுப்பேற்றது முதல் மூன்றாண்டுகள் துணைவேந்தராக பணியாற்றுவார் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

நிர்வாக அனுபவம்...

டாக்டர் வைதேகி விஜயகுமார் அண்ணா பல்கலைக் கழகத்தின் பேராசிரியராக 12 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பல்வேறு வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் கனடாவில் யர்சன் பல்கலைக் கழகம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம், நன்யாக் தொழிற்நுட்ப பல்கலைக் கழகம் ஆகியவற்றில் சிறப்பு பேராசிரியராக பணியாற்றியதுடன் நிர்வாக அனுபவம் பெற்றுள்ளார். அண்ணா பல்கலைக் கழகத்தின் துறைகளில் தலைமை பேராசிரியராக 6 ஆண்டுகளாகவும் பல்கலைக் கழகத்தின் முதல்வராகவும் வி.ஐ.டி. முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.

ஆராய்ச்சி அறிக்கைகள்...

24 ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளது மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் 266 ஆராய்ச்சி அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளார். புதிய துணை வேந்தராக பதவியேற்றுள்ள வைதேகி பல்வேறு பல்கலைக் கழகங்களின் கல்வி வாரியத்தின் உறுப்பினராகவும் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் வேலூர் வி.ஜ.டி. ஆகியவற்றின் கல்விக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து