முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் பதவியேற்றனர்

புதன்கிழமை, 29 மே 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் முன்னிலையில் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல்18ம் தேதி 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும். 18 சட்டசபைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மே 19 ம் தேதி மேலும் 4 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 23 ம் தேதி நடைபெற்று முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தி.மு.க. 13தொகுதிகளிலும். அ.தி.மு.க.  9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

வெற்றிப்பெற்ற புதிய அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களுக்கான பதவியேற்பு விழா சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் நேற்று நடைபெற்றது. புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால், தனித்தனியாக பதவி ஏற்பு உறுதிமொழியும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இது தொடர்பாக சட்டசபை செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு.,

தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்க․பட்ட உறுப்பினர்கள் சபாநாயகரின் அறையில், அவரது முன்னிலையில் காலை 9.48 (நேற்று) மணியளவில் இந்திய அரசியலமைப்பிற்கிணங்க, சட்டமன்ற பேரவை உறுப்பினர்களாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதிவாரியாக சூலூர் (கந்தசாமி), பாப்பிரெட்டிப்பட்டி (கோவிந்தசாமி ) , பரமக்குடி - தனி (சதன் பிரபாகர்), அருர் - தனி (சம்பத்குமார்), சோளிங்கர் (சம்பத்து), விளாத்திகுளம் (சின்னப்பன்), நிலக்கோட்டை - தனி (தேன்மொழி),  மானாமதுரை -தனி (நாகராஜன்) சாத்தூர் (ராஜவர்மன்) ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், ஏராளமான அ.தி.மு.க.வினர்திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து