எரியோடு அருகே உள்ள காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் மாணவர்கள் உயர்கல்வி படிப்பதில் ஆர்வம்

வியாழக்கிழமை, 30 மே 2019      திண்டுக்கல்
30 kamaraj univercity

திண்டுக்கல் -எரியோடு அருகே உள்ள காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில்  மாணவர்கள் உயர்கல்வி படிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த கல்லூரியில் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு 2ம் கட்ட கலந்தாய்வு காமராஜர் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பொறியாளர் ராஜ்குமார் மேற்பார்வையிலும், கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் செல்லப்பாண்டி அவர்கள் தலைமையிலும் நடைபெற்றது. இந்தக்கலந்தாய்வு மாணவர்களின் மதிப்பெண் தரவரிசை முறையிலும், இனச்சுழற்சி அடிப்படையிலும் நடைபெற்றது. மிகவும் பின்தங்கிய பகுதியான இங்கு மாணவர்கள் மிகவும் அதிக மதிப்பெண்கள் எடுத்தும் மேற்படிப்பை தொடர முடியாத ஏழை மாணவர்களுக்கு இக்கல்லூரி ஒரு வரபிரசாதமாக அமைந்துள்ளது. சேர்க்கை அனுமதி கிடைக்கப்பெற்ற மாணவர்கள் குறைந்த கல்விக்கட்டணத்தில் தங்களது உயர்கல்வியை தொடர்வோம் என்ற மகிழ்ச்சியில் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து