Idhayam Matrimony

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடைவிதிக்க ஐகோர்ட் மறுப்பு

வியாழக்கிழமை, 30 மே 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வழக்கு...

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் ஜூன் 8-ம் தேதியும், இரண்டாம் தாள் 9-ம் தேதியும் நடைபெற உள்ளது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பரமானந்தம் மற்றும் சக்திவேல் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிரியர் தகுதித் தேர்வில், பிரதான பாடத்திற்கு குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச மதிப்பெண் நிர்ணயிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

தள்ளுபடி...

அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்காக லட்சக்கணக்கானோர் காத்திருப்பதால் தேர்வுக்கு தடை விதிக்கக் கூடாது என்று தெரிவித்தார். கேள்வித்தாள் எப்படி அமைய வேண்டும் என்பதை விண்ணப்பதாரர்கள் தீர்மானிக்க முடியாது என்றும் கூறினார். அரசுத் தரப்பு விளக்கத்தை ஏற்ற உயர்நீதிமன்றம், தகுதித் தேர்வுக்கு தடை கோரி பரமானந்தம் மற்றும் சக்திவேல் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து