மத்திய அரசுடன் இணைந்து செயலாற்றுவோம்: காங்கிரஸ்

வெள்ளிக்கிழமை, 31 மே 2019      இந்தியா
Congress party 14-09-2018

புது டெல்லி, நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து செயலாற்றுவோம் என காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவை டெல்லியில் பதவியேற்றது. இவ்விழாவில் காங்கிரஸ்  தலைவர் ராகுல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். வெளிநாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள் என ஏறக்குறைய 8000 வி.ஐ.பி.க்கள் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

பதவியேற்பு விழா முடிந்த சிறிது நேரத்தில் காங்கிரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி மற்றும் அவரது புதிய அமைச்சர்களுக்கு வாழ்த்துக்கள். நாட்டின் வளர்ச்சிக்காகவும், ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்திற்காகவும் உங்களுடன் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என பதிவிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பும், தேர்தல் பிரசாரத்தின் போது மோடியையும், அவரது அரசையும் கடுமையாக விசாரித்து வந்த காங்கிரஸ் தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் இணைந்து பணியாற்றுவோம் என சமாதானப் போக்கை கடைபிடித்துள்ளது தேசிய அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து