நிர்மலா சீதாராமனுக்கு மெகபூபா முப்தி வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 31 மே 2019      இந்தியா
mehbooba-mufti 2019 05 21

புது டெல்லி, மத்திய மந்திரிசபையில் முதல்முறையாக முழுநேர பெண் நிதி மந்திரியாக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் தலையெழுத்தையும் வளர்ச்சியையும் நிர்ணயிக்கக்கூடிய சக்தியும் பொறுப்பும் வாய்ந்த அரசின் முக்கிய துறையாக மத்திய நிதி அமைச்சகம் இருந்து வருகிறது. பல்வேறு மந்திரிகளின் கீழ் வரும் பலதுறைகளுக்கான நிதி நிர்வாகங்கள் அனைத்தையும் கண்காணித்து ஆண்டுதோறும் பாராளுமன்றத்தில் வரவு -செலவு அறிக்கையை தாக்கல் செய்யும் நம் நாட்டின் மத்திய நிதி மந்திரி பதவியை பெரும்பாலும் ஆண்களே ஆக்கிரமித்து வந்துள்ளனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1970-71-ம் ஆண்டுகளுக்கு இடையில் ஒரேயொருமுறை இந்த நிதித்துறை இலாகாவை கூடுதல் பொறுப்பாக கவனித்தார். மற்றபடி இதுவரை நிதி அமைச்சகத்துக்கு வேறெந்த பெண்மணியும் மந்திரியாக நியமிக்கப்பட்டதில்லை. இந்த குறையை தீர்க்கும் வகையில் மத்திய மந்திரிசபையில் முதல்முறையாக முழுநேர பெண் நிதி மந்திரியாக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த பொறுப்பை ஏற்றதன் மூலம் ஆண், பெண்ணுக்கு இடையிலான சரிநிகர் சமத்துவத்துக்கான பழைய அளவுக்கோல்களை எல்லாம் நிர்மலா சீதாராமன் தகர்த்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் மெகபூபா முப்தி குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து