பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் சிறிசேனா சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 31 மே 2019      இந்தியா
pm modi 2019 05 01

புதுடெல்லி, டெல்லியில் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடியை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா நேற்று சந்தித்தார்.
 
பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான ஆட்சியில் பிரதமர் மோடி நேற்று இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். மோடியின் பதவியேற்பு விழாவில் பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற மோடியுடன் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா நேற்று  சந்தித்தார்.டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா  சந்தித்து உரையாடினார். அப்போது, மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட மோடிக்கு சிறிசேனா தனது வாழ்த்துக்களை கைகுலுக்கி தெரிவித்தார்.

இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து