புதிய கடற்படை தளபதியாக கரம்பீர் சிங் பொறுப்பேற்பு

வெள்ளிக்கிழமை, 31 மே 2019      இந்தியா
Karambir Singh-Navy-commander 2019 05 31

புதுடெல்லி, டெல்லியில் நடைபெற்ற விழாவில் புதிய கடற்படை தளபதியாக கரம்பீர் சிங் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.  

கடற்படை தளபதியாக இருந்த சுனில் லம்பா ஓய்வு பெற்றார். இதையடுத்து, இந்திய கடற்படைக்கு புதிய தளபதியாக கரம்பீர் சிங் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், புதிதாக நியமனம் செய்யப்பட்ட கரம்பீர் சிங் டெல்லியில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லியில் நடந்த விழாவில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர் புதிய தளபதியாக பொறுப்பேற்றார்.

அப்போது அவர் கூறுகையில், எனது முன்னோர்கள் இந்திய கடற்படைக்கு திடமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளனர். புதிய உயரங்களை எட்டியுள்ளனர். அவர்களது வழியில் எந்த சவால்களையும் சந்திக்கும் விதமாக கடற்படையை வலுப்படுத்தும் விதத்தில் செயல்படுவேன் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து