கடந்த அமைச்சரவையில் தனக்கு வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி : சுஷ்மா உருக்கம்

வெள்ளிக்கிழமை, 31 மே 2019      இந்தியா
sushma 2018 9 10

புதுடெல்லி, மோடியின் கடந்த அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ், மக்களுக்கு சேவை புரிய பிரதமர் தனக்கு வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி என உருக்கமுடன் தெரிவித்துள்ளார். 

  பிரதமர் மோடியுடன் சேர்த்து மத்திய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் என 57 பேர் பதவியேற்றனர். மோடியின் கடந்த கால அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மூத்த தலைவர்களான சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண்ஜெட்லி ஆகியோர் தற்போதைய மத்திய அமைச்சரவையில் இடம் பெறவில்லை.

இந்த நிலையில் சுஷ்மா சுவராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு உருக்கமாக நன்றி தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர், தமக்கு கடந்த 5 ஆண்டுகள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து மக்களுக்கு சேவை புரியும் வாய்ப்பை அளித்தார். இதற்காக பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். மேலும் மக்களவை தேர்தலில் அசாத்திய வெற்றி பெற்று மீண்டும் அமைந்துள்ள பாஜக ஆட்சி, வெற்றிகரமாக நடைபெற இறைவனை பிரார்த்திப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து