வெளிநாட்டு தலைவர்களுடன் மோடி முக்கிய ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 31 மே 2019      இந்தியா
Modi BJP 2019 03 29

 புதுடெல்லி, நேபாளம், மொரிஷியஸ், பூடான், வங்காளதேசம் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி டெல்லியில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.  

நாட்டின் பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறை  பொறுப்பேற்ற நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த அதிபர்களும் பிரதமர்களும் இந்தியா வந்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா நேற்று  காலை பிரதமர் மோடியை சந்தித்து இருநாடுகள் இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். 

இதைதொடர்ந்து, வங்காளதேசம் அதிபர் அப்துல் ஹமித், மொரிஷியஸ் பிரதமர் பிரவின்ட் குமார், நேபாள பிரதமர் ஷர்மா ஒலி, பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி அந்நாடுகளுடனான இந்தியாவின் பல்வேறுதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து