மத்திய உள்துறை மந்திரியாக அமித்ஷா பொறுப்பேற்றார் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு

சனிக்கிழமை, 1 ஜூன் 2019      இந்தியா
Amit Shah-Home Minister- 2019 06 01 copy 0

புதுடெல்லி, மத்திய உள்துறை மந்திரியாக பதவி ஏற்ற அமித்ஷா டெல்லியின் உள்துறை அமைச்சகத்தில் நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.  

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக  பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 57 மந்திரிகளும் பதவியேற்றுக் கொண்டனர். பிரதமர் மோடி உள்ளிட்ட மந்திரிகளுக்கு  துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கிடையே, பாஜக தேசிய தலைவராக உள்ள அமித்ஷா உள்துறை மந்திரியாக நியமனம் செய்யப்பட்டார். 

இந்நிலையில், டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்துக்கு அமித் ஷா நேற்று காலை வந்தார். அவருக்கு அலுவலக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து, அமித்ஷா முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து