முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. ஒரு லட்சம் நிதி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சனிக்கிழமை, 1 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. ஒரு லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

நாமக்கல் - திருப்பூர்

காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் வட்டம், கடப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கோதண்டம் என்பவரின் மகன் பிரகாஷ், அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், கருவலூர் கோவில் திருவிழாவின் போது, ஏற்பட்ட விபத்தில் கோயம்புத்தூர் மாவட்டம், கெம்பட்டி காலனியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவரின் மகன் வேணுகோபால் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், பெரப்பஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் சந்திரன் கிணறு தூர் வாரும் போது, மண் சரிந்து விழுந்து உயிரிழந்தார். நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், வாய்மேடு மேற்கு கிராமத்தைச் சேர்ந்த சுப்பையன் என்பரின் மனைவி காசியம்மாள் தனது வீட்டின் கூரை இடிந்து விழுந்து  உயிரிழந்தார்.

திருச்சி - துறையூர்...

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் பகுதி மற்றும் கிராமம் முக்கொம்பு காவேரி ஆற்றில்  குளித்துக் கொண்டிருந்த, திருச்சிராப்பள்ளி மாவட்டம், தாயனூர், ராம்ஜி நகரைச் சேர்ந்த ரெங்கசாமி என்பவரின் மகள் கீர்த்திகா மற்றும் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையைச் சேர்ந்த கோபிநாதன் என்பவரின் மகன்  ஹரிஹரதீபக் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். துறையூர் வட்டம், தென்புறநாடு மஜரா புத்தூர், அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த தங்கராசு என்பவரின் மகள் பிரியதர்ஷினி  மற்றும் மாணிக்கம் என்பவரின் மகள் சிந்துஜா ஆகிய இருவரும் உணவு இடைவேளையின் போது, அருகில் உள்ள குட்டையில் கை கழுவச் சென்ற போது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஆழ்ந்த இரங்கல்...

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், புன்னகாயல் கிராமத்தைச் சேர்ந்த அடைக்கலம் என்பவரின் மகன் சேசுராஜ் கோவில் திருவிழாவிற்கு சென்ற இடத்தில், எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்திகளை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன். சாலை விபத்து மற்றும் எதிர்பாராத விதமாக நடந்த பல்வேறு நிகழ்வுகளில்  உயிரிழந்த மேற்கண்ட 9 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலா ரூ.1 லட்சம்...

மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 9 நபர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து