காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு

சனிக்கிழமை, 1 ஜூன் 2019      இந்தியா
sonia 2019 05 27

புதுடெல்லி, டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் கூட்டத்தில், பாராளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.  

காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் நேற்று  நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் 52 மக்களவை எம்.பி.க்களுடன், மாநிலங்களவை எம்.பி.க்களும் பங்கேற்றனர். இதில், பாராளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். 

சோனியா காந்தியின் பெயரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரைத்தார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதன்மூலம் அவர் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு தலைவராக இருப்பார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து