முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இப்தார் விருந்துக்கு வந்தவர்களை அதிகாரிகள் விரட்டியடிப்பதா? பாகிஸ்தானுக்கு இந்திய தூதரகம் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்திய தூதரகம் அளித்த இப்தார் விருந்துக்கு வந்த சிறப்பு அழைப்பாளர்களை அந்நாட்டு அதிகாரிகள் விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமாபாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் சார்பில் நேற்று முன்தினம் மாலை சில முக்கிய பிரமுகர்களுக்கு இப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்தில் பங்கேற்க வருமாறு சிறப்பு அழைப்பாளர்களாக சிலருக்கும் தகவல் அனுப்பப்பட்டது.

இந்த அழைப்பாளர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பாகிஸ்தான் அதிகாரிகள் இந்திய தூதரகம் அளிக்கும் இப்தார் விருந்தில் பங்கேற்க வேண்டாம் என்று மிரட்டல் விடுத்தனர். கண்டுபிடிக்க முடியாத ரகசிய தொலைபேசி எண்களில் இருந்து வந்த இந்த மிரட்டல்களுக்கு அடிபணியாமல் பலர் இப்தார் விருந்துக்கு வந்திருந்தனர். ஆனால், இப்தார் விருந்து நடைபெற்ற செரேனா ஓட்டலை சுற்றிலும் நின்றிருந்த பாகிஸ்தான் அதிகாரிகள் இப்தார் விருந்துக்கு வந்த நூற்றுக்கணக்கானவர்களை அவமானப்படுத்தி திருப்பி அனுப்பினர். சிலரை மிரட்டும் பாணியில் விரட்டியும் அடித்தனர்.

பாகிஸ்தான் அரசின் இந்த கேவலமான செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தானுக்கான உயர் தூதர் அஜய் பிஸாரியா, பாகிஸ்தான் அதிகாரிகளின் நாகரிகமற்ற இதுபோன்ற மிரட்டல்போக்கு தூதரகங்களுக்கு இடையிலான ராஜதந்திர முயற்சிகளை சீரழித்து விடும்.

எங்கள் இப்தார் நிகழ்ச்சிக்கு வந்து பாகிஸ்தான் அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்ட அனைவரிடமும் நாங்கள் மன்னிப்பு கோருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து