விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2019      திண்டுக்கல்
2 dgltrain

திண்டுக்கல், - விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு இன்று (3ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு வெளியூர்களுக்கு சென்று திரும்பியவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். இதற்காக பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அரசு சார்பில் இதற்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. அதில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் எவ்வித சிரமமுமின்றி பயணம் மேற்கொண்டனர். இதேபோல் ரயில் நிலையங்களிலும் முன்பதிவு செய்து ஏராளமானோர் பயணித்தனர். முன்பதிவு செய்யாத பயணிகள் ஞிண்ட நேரம் காத்திருந்து மாற்று வாகனங்களில் சென்றனவ். இதனால் மக்கள் கூட்டம் இரவு வரை காணப்பட்டது.
பள்ளிகள் திறப்புக்காக பல்வேறு ஆயத்தப்பணிகள் அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளது. சீருடைகள் வாங்குதற்காக தையல் கடைகளிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும் புத்தகப்பை, மற்றும் கல்வி உபகரணங்கள் வாங்குவதற்காக கடைகளில் மக்கள் கூட்டம் இருந்தது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் புத்தம் புதுப்பொழிவுடன் மாற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து