முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானல் கோடை விழாவின் 4ஆவது நாளான நேற்று படகு அலங்கார போட்டிகள்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2019      திண்டுக்கல்
Image Unavailable

கொடைக்கானல்  கொடைக்கானல் கோடை விழாவின் 4ஆவது நாளான நேற்று படகு அலங்கார போட்டிகள் நடைபெற்றன இதில் ஊரக வளர்ச்சி துறை முதலிடம் பெற்றது
 கொடைக்கானலில் கோடை விழா கடந்த 30ஆம் தேதி மலர் கண்காட்சி உடன் தொடங்கியது. இதன் நான்காவது நாளான இன்று அரசு துறைகள் பங்கேற்ற படகு அலங்கார போட்டிகள் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சித் துறை, தோட்டக்கலைத் துறை மீன்வளத் துறை ,மற்றும் சுற்றுலாத் துறை களின் சார்பாக படகுகளில் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன
இதனை சுற்றுலா பயணிகள் பெரிதும் ரசித்து மகிழ்ந்தனர். இதில் வெற்றி பெற்ற அலங்காரங்களுக்கு பரிசுக் கோப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி போட் கிளப்பில் உள்ள அரங்கில் நடைபெற்றது. இதில் முதல் பரிசினை ஊரக வளர்ச்சித் துறையும் இரண்டாவது பரிசினை தோட்டக்கலைத்துறையும் மூன்றாவது பரிசினை மீன்வளத்துறையும் பெற்றன. இதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாதேவி போட் கிளப்பின் கவுரவ தலைவர் பவானி சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர் நிகழ்ச்சியில் கிளப்பின் உறுப்பினர்  ரஷீத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்தி வடிவேல்முருகன், தங்கவேலு போட் கிளப்மேலாளர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி சுற்றுலா அலுவலர் ஆனந்தன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து