திண்டுக்கல்லில் பள்ளிகள் திறப்பு அரசு பள்ளி மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்ற ஆசிரியர்கள்

திங்கட்கிழமை, 3 ஜூன் 2019      திண்டுக்கல்
3 school re open

திண்டுக்கல்,- திண்டுக்கல்லில் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளன்று அரசு பள்ளி மாணவர்களகுக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்குப் பிறகு நேற்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் வழக்கமான உற்சாகத்துடன் புத்தாடை அணிந்து பள்ளிக்கு வந்தனர். இதனால் வெறிச்சோடி கிடந்த சாலைகள் அனைத்தும் பள்ளி மாணவர்களின் தலைகளாக காணப்பட்டன. அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் விடுமுறைக்கு பிறகு வந்த மாணவ, மாணவிகள் தங்கள் பழைய நண்பர்களை பார்த்து மகிழ்ந்து கட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர். மேலும் ஆசிரியர்களும்  மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். எல்.கே.ஜி., யு.கே.ஜி. முதலாம் வகுப்பில் புதிதாக வந்த மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுக்கு மலர் மற்றும் சாக்லேட் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். திண்டுக்கல் அருகிலுள்ள வத்தலதோப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வந்த மாணவர், மாணவிகள் அனைவரையும் மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
அனைத்து பள்ளிகளிலும் பள்ளிகள் திறந்த முதல் நாளன்று பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. மேலும் பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்கள் பயோமெட்ரிக் முறையில் தங்கள் வருகை பதிவேட்டை பதிவு செய்தனர். ஆதார் எண் மூலம் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு இடது கை பெருவிரல் மூலம் பதிவு செய்யப்பட்டது. நாளொன்றுக்கு 4 முறை இதே போல் வருகை மற்றும் வெளியே செல்லும் நேரம் பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து