முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து எலிசபெத் ராணி அரண்மனையில் தடபுடல் விருந்து டிரம்ப் மறந்ததை நினைவு கூர்ந்த மனைவி

செவ்வாய்க்கிழமை, 4 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

லண்டன், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இங்கிலாந்து சென்றுள்ளனர். ராணி எலிசபெத் அரண்மனையில் மெலனியா டிரம்ப், டிரம்ப் மறந்த ஒன்றை ஞாபகப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளனர். இங்கிலாந்து அரசு மற்றும் ராணி எலிசபெத் சார்பில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப், ராணி அரண்மனையில் அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றார். பின்னர் ராணி எலிசபெத்துடன் கலந்துரையாடினார். பின்னர் அரண்மனையில் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. அப்போது ராணி எலிசபெத் தனது அறையிலுள்ள பரிசுகளை டிரம்பிற்கு காண்பித்தார். அப்போது ஒரு குறிப்பிட்ட குதிரை சிலையை ராணி காண்பித்து, இது ஞாபகம் இருக்கிறதா என கேட்டுள்ளார். அதற்கு டிரம்ப் ஞாபகம் இல்லை என கூறியுள்ளார். அவரது அருகில் இருந்த மெலனியா, இது நீங்கள் ராணிக்கு ஒரு வருடத்திற்கு முன் பரிசாக அளித்தது என நினைவு கூர்ந்துள்ளார். மேலும் சந்திப்பின் போது ராணி எலிசபெத், 1959-ம் ஆண்டு வின்ஸ்டன் சர்ச்சில் எழுதிய இரண்டாம் உலகப் போர் எனும் புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து